இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆற்றங்கரைத்தோப்பு வீரபாண்டியனும் அவனது "மகாராஜாவும்" இந்த தோப்பிற்கு வந்து மூன்று நாட்களாகிவிட்டன. ஆனால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னால் தங்களது தோணியை நிறுத்தி பாம்பன் திவில் இறக்கிவிடப்பட்ட தனுக்காத்த இராமுத் தேவரும் இதுவரை திட்டப்படி இங்கு வந்து சேராதது அவர்களுக்கு கவலை அளித்தது. அவருக்கு என்ன ஏற்பட்டது? ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டாரா?