இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோ ட்டைக்குள் இருந்த சவுக்கையில் அமர்ந்து இருந்த சேதுபதி மன்னர்முன் என்னை அழைத்துப் போய் நிறுத்தினர் அல்லவா? அவர் என்னை ஒருமுறை உற்று நோக்கினார். அந்தப் பார்வையில் பயங்கரமான கடுமை இருந்தது. அத்தகைய கடுமையான பார்வை -யை யாரிடமும் பார்த்தது இல்லை என்றாலும் சிறிதும் தயக்கமில்லாமல் அவரது கேள்விகளுக்குப் பதில் சொன் னேன்.