இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அந்தி நேரம்.... இராமநாதபுரம் சீமையின் தென் கிழக்குக் கடற்கரையில் ஒரு தென்னந்தோப்பு. கொண்டல் காற்று வேகமாக வீசியது. துாரத்தில் கடல்அலைகள் எழுந்து எழுந்து விழுவதில் இருந்து தெரிகிறது. கடற்கரையிலும் மக்கள் சஞ்சாரம் எதுவும் இல்லை. தோப்பின் காவல்காரரது குடிசைக்கு எதிரில் இருந்த கயிற்றுப் பின்னல் கட்டிலில் நடுத்தர வயதுள்ள ஒருவர்