140 எஸ். எம். கமால் " பிரதானியாரே வணக்கம்" "வணக்கம் பூஜை முடிந்து விட்டதா?" " ஆம் இதோ பிரசாதம் பெற்றுக்கொள்ளுங்கள். மகாராஜாவுக்கும் எடுத்துச் சொல்கிறேன்." " இராமநாதபுரம் திரும்புவது பற்றி மகாராஜா ஏதும் தெரிவித்தார்களா?" "இல்லை. ஆனால் மகாரானியும் ராஜ நர்த்தகியும் சிக்கிரம் திரும்ப வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்" "ஏதாவது விஷேசகாரனம் உண்டா?" "விஷேசமான காரணம் எதுவும் இருப்பதாக அடியேனுக்குப் புலப்படவில்லை. ஆதலால் நம்ம இராமநாதபுரம் அரண்மனைக்கு சாட்சி சாலையில் உள்ள புலி இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகள் போட்டிருப்பதாக அரண்மனை அட்டவணை செய்தி அனுப்பி இருப்பது எனக்குத் தெரியும். ஒரு வேளை அந்தப் புலிக்குட்டிகளைப் பார்ப்பதற்கு ஆசைப்படுகிறார்கள் போலத் தெரிகிறது." " நல்ல காரணம் சொன்னிர் அய்யா என்று பிரதானி சிரித்துக் கொண்டே சொன்னார். ' அப்ப நான் வரட்டுமா? என்று சொல்லி அதே வளாகத்தில் உள்ள இராமேஸ்வரம் அரண்மனைக்கு சென்றார் கார்வார்.
பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/152
Appearance