இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Iiநிராவி மாளிகை மாலையில் மன்னர் சவுக்கைக்குச்சென்றபொழுது பிரதானியும் பணியாளர்களும் காத்து இருந்தனர். பிரதானியில் முகத்தில் பரபரப்பு படர்ந்து காணப்பட்டது. மன்னரை வணங்கிய பிரதானி அன்று சேது நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள கோட்டைச் சேர்வைக்காரர்கள். அலுவலர்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து வந்த ஒலைகளைப் படித்துக் காண்பித்தார் பிரதானி.