இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ். எம். கமால் இராமநாதபுரம் கோட்டை தென்கிழக்கு மூலையில் அமைந்து இருந்த சிறைச்சாலைக்கு கோட்டைத் தளபதியுடன் பிரதானி வந்தார். எட்டையபுரம் பாளையத்தில் இருந்து வந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் உளவாளி அடைக்கப்பட்டுள்ள அறைக்குள் சென்றார். அப்பொழுது முற்பகல் நேரமாக இருந்ததால் அந்த நபர் அறையின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருந்தார். "குமாரமுத்து நாயக்கரே!