பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 265 பெருமைகளை மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார். அதே இலக்கியம் சேது சமஸ்தானத்திற்கு கிடைத்த சிறந்த அணியாகும். இதுவரை எந்த சேதுபதி மன்னரைப் பற்றிய இலக்கியம் எதையும் புலவர்கள் பாடவில்லை. அந்த ச் சுவடிக்கு நகல் எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்களில் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்."

  1. "நல்லது மாசித் திருவிழாவில் கலந்துெ காள்ளுமாறு அவருக்கு இலை அனுப்பி வையுங்கள்"

"உத்திரவு" பிரதானியார் விடைபெற்றுச் சென்றதும் மன்னரும் சலுக்கையில் இருந்து எழுந்து மாளிகைக்குள் சென்றார். 輯.載 輯 庫 輯 சேதுபதி மன்னர் அரண்மனை முகப்பில் உள்ள சவுக்கையில் அமர்ந்து இருக்கிறார். அருகே அழகிய சிற்றம்பலக்கரராயர் தனியான இருக்கையில் இருந்தார். பிரதானி இருவருக்கும் இடையில் மன்னரது இருக்கைக்கு மிகவும் சமீபத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது அரண்மனை கார்வார் வந்து | # - -- * - வைத்தியர் கொண்டமநாயுடுவும் அவரது மகளும் வந்துகொண்டிருக்கின்றனர்" என்று தலைதாழ்த்தி பணிந்து சொல்லிவிட்டு ஒரு பக்கமாக நின்றார். "மகாராஜா நமஸ்காரம்" என்று கூப்பிய கரங்களுடன் அவரது மகள் முக்தாலம்மாளும் கைகூப்பி பின்தொடர வந்து I. * == o - + = = என்ன அதற்குள் பயணமா? இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுச் செல்லலாமே" மன்னர் அன்புடன் அவர்களை வினவினார்.