இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ON) ఫ్రో கி ழக்குக் கடற்கரை. சேதுக்கரையை அடுத்த தென்னந்தோப்பு. அந்திநேரம் காற்று அதிகரித்து கடல் அலைகளை அலைக்கழிக்கத் தொடங்கின. இதனால் அந்தக் கடற்கரைப் பகுதி முழுவதும் ஒவென்ற காற்றின் அலை ஒசையை எதிரொலித்துக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல கடலில் இருந்து எழுகின்ற கார்மேகம் போன்ற இருள் கடல் பரப்பையும் நிலப்பரப்பையும் ஒரு சேரக் கவித்துகொண்டு இருந்தது.