இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
♔ இ. ராம நாத புரம் அரண்மனை. அந்தப்புர வளாகத்தில் உள்ள மகாராணியாரதது அறை. ஹம்சதுாளிகா மஞ்சகி கட்டிலில் ஒரு புறத்தில் சாய்த்து வைக்கப்பட்ட தலையணைகள் மீது முதுகைச் சாய்த்தவாறு மகாராணியார் அமர்ந்து இருந்தார். பல மாதங்களாக நலிவுந்ந நோயாளி போன்ற தோற்றம் அருகில் நின்று கொண் டிருந்த கலாதேவியின் கரங்களில் பால் கிண்னமும் குவளையும் இருந்தன.