பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 333 "ஆம் விபரீத மிகப் பெரிய பூகம்பம் எl து மதுரை வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியை எனது இபதப வாழ்க்கை தணித்துக் கொள்ள உதவியது. இராமநாதபுரம் சேதுபதி மன்னரது பரிவும், உடன் பிறப்பாகக் கொண்ட மகாராணியாத ஒப்புயர்வற்ற பாசமும் எனது தனிமையையும் வேதனையைப் மறந்து வாழ்ந்து வந்தேன்." "பிறகு என்ன நடந்தது" ஆவலுடன் கேட்டார் இளந்துறவி. "என்ன நடந்தது ... எனது வாழ்க்கைக் கனவுகள் மழையில் நனைந்த ஒவியமாக அழிந்து சிதைந்தது. இதோ அந்த ஒவியத்தை தன்னகத்தே கொண்டு பெருமிதத்துடன் காட்சியளித்துவரும் சட்டம் நான்தான்" "இன்னும் சற்று விளக்கமாக சொல்லலாமே!" கலாதேவியின் இதயத்தை கலக்கி, குலுக்கிய வேதனைப் பிரவாகமாக சொற்களில் வெளிவந்தன. அப்பொழுது அவரது கண்களிலும் கண்ணிர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்து கொட்டியது. "தேவி போதும் உனது பேச்சு நீ ஒன்றும் சொல்லவேண்டாம் ஏற்கனவே நான் மிகவும் சொந்து வந்திருக்கிறேன். இரண்டு நாட்களில் என்ன நடக்கும் என்ற பயமும் பீதியும் என்னை அலைக்கழித்துக் கொண்டுள்ள நிலையில்..." "சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள். தங்களிடம் சொல்லாமல் எனது அவலத்தை வேறு யாரிடம் சொல்வேன்? சங்களிடம் சொல்வதற்காகவே காத்து இருந்தேன்" என்று சொல்லிய கலாதேவி கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். பிலான அவள் தொடர்ந்து சொன்னாள். "எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இறுதியில் இராமநாதபுரம் ாபஸ் சாப் பணியில் இருந்த என்னை பணியாளராகக் கருதி 'அக்காமல், உடன்பிறந்த தங்கையாகவே மதித்து அன்பைப் பொllத ஆலவிருட்சம் - மகாராணியார் என்னைத் தவிக்க விட்டு மnைத்த இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. . . ." என்று குமுறிக் கொண்டு வந்த அழுகையை அடக்கியவாறு சொல்லி பyத்தாள் கபதே.வி.