பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11B - - =சேதுபதி மன்னர் இந்தமன்னர்திருப்பணிசெய்து அமைத்த இராமேஸ்வரம் திருக்கோயில் அணுக்கமண்டபத்தில் இந்த மன்னரது திரு உருவமும் இவரது தந்தை கதம்பத் தேவரது திரு உருவமும் காணப்படுகின்றன. இராமேஸ்வர கோயிலின் திருப்பணிகளில் மட்டுமல்லாமல் அன்றாட வழிபாட்டு முறைகளிலும் ஆண்டு விழாக்கள் நடத்துவதிலும் மிகுந்த அக்கறை கொண்டு ஆவணி மாதத் திருவிழா, மாசித் திருவிழா போன்ற ஆண்டு விழாக்களுக்கு உதவும் வகையில் பல கிராமங்களின் வருவாய்களை சர்வ மானியாக இந்தத் திருக்கோயிலுக்கு வழங்கி உள்ளார். மேலும் மன்னார் வளைகுடாவில் தமக்குள்ள முத்துக் குளிக்கும் உரிமையை இந்த மன்னர் திருக்கோயிலுக்கு விட்டுக் கொடுத்ததுடன் ஆண்டு தோறும் முத்துச் சிலாபத்தில் இரு தோணிகள் வைத்து முத்துக் குளிக்கும் உரிமையனையும், தான சாசனம் செய்து இராமேஸ்வரம் கோயிலுக்கு வழங்கியுள்ளார். மேலும் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்குத் திருத்தேர் ஒன்றினைச் செய்வித்து வழங்கியதுடன் அந்தத் தேரோட்டத்திற்கு முதன்முதலாகவடம்பிடித்துத் தொடக்கி வைத்தவரும் இந்த மன்னரே ஆவார். இந்தச் செய்தியினை தேவை உலா என்ற சிற்றிலக்கியம் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. மேலும் இந்த மன்னர் நாள்தோறும் அர்த்தஜாம பூஜை முடிந்தவுடன் சுவாமி அம்பாளின் பள்ளியறைக்குச் சென்ற பிறகு அந்தப் பள்ளி அறையில் சுவாமி அம்பாளின் பயன்பாட்டிற்காக வெள்ளி ஊஞ்சல் ஒன்றினையும் பதினெட்டாயிரம் வராகன் எடையில் செய்து வழங்கியுள்ளார். இந்த அறச்செயலை தெரிவிக்கும் கல்வெட்டு இராமேஸ்வரம் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. --- இந்தக்கல்வெட்டில் இந்தமன்னரதுபெயராகமுத்துவிஜய என்ற தொடர்காணப்படுகிறது. ஆனால் இதேசிறப்புப்பெயர் இந்த மன்னரது முன்னவர்களானரெகுநாதகிழவன்.சேதுபதிக்கும், ரெகுநாத திருமலை சேதுபதிக்கும் வழங்கப்பட்டிருந்ததை அவர்களது கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தெரிவிக்கில் -