பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 கல்வெட்டுக்கள் – குறிப்பாக திருமலை சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தில் சொக்கப்பன் சேர்வைக்காரர் என்பவர் வழங்கியுள்ள அறக்கொடையைப் போல இந்தக் குளுவன்குடி கல்வெட்டில் ரெகுநாத காங்கேயன் சேர்வைக்காரர் அறக்கொடை வழங்கி இருப்பது, திருமலை ரெகுநாத சேதுபதியின் கால அமைப்பு தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் நடைபெற்று வந்துள்ளதை காண முடிகிறது. - இந்தக் கல்வெட்டின் இரண்டாம் பகுதியிலுள்ள வரிகள் 37 முதல் 59 வரை மிகவும் சிதிலமடைந்து விட்டதால் இந்த தர்மம் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை. இதே பகுதியில் உள்ள களத்தூர் என்ற ஊரினை தனுக்கோடியில் இருந்த அந்தணர் குடியிருப்புக்காக ரகுநாத கிழவன் சேதுபதி மன்னரது மனைவி ராணி காதலி நாச்சியார் கி.பி.1709-ல் சர்வமான்யமாக வழங்கி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டின் இன்னொரு சிறப்புச் செய்தி முதற் பக்கத்தில சிவலிங்கம், சந்திரன் தாமரை, சூரியன் ஆகியவைகளுடனும் மறுபக்கத்தில் ராம பிராமனது வில் ஏந்திய திரு உருவமும் புடைபட! சிற்பமாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.* 1. "ஸ்வ ஸ் (திபூதி) மன் 2. மகா மண்டலே 3. சுரன் அரியராயதள 4. வி பாடன் பாசை 5. க்கு தப்புவாராய