பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் l இய lad 28 o நயினார் கோவில் கல்வெட்டு சேதுநாட்டில் கி.பி.17ம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து வந்த சேதுபதி மன்னர்களது தன்னரசு ஆட்சியில் இறுதி மன்னராக விளங்கியவர். முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆவார். கர்நாடக நவாப் முகமது அலியிடம் பலவிதமான சலுகைகளைப் பெற்று வந்த ஆங்கில கிழக்கியந்தியக் கம்பெனியார் இராமநாதபுரம் சேது மன்னர்களது பகுதியான மறவர் சீமையை உள்ளடக்கிய மதுரைச் சீமையின் நிலத் தீர்வையை வசூலித்துக் கொள்ளும் உரிமையினை கி.பி.1792ல் பெற்றனர். தங்களது வணிக நலன்களுக்குச் சிறிதும் ஒத்துழைபபு நல்க மறுத்து வந்த இந்த சேதுபதி மன்னரைத் தங்களது சூழ்ச்சியினால் கி.பி.1795-ல் முடியிழக்கச் செய்ததுடன் சேது நாட்டை அவர்களது உடைமையாக்கிக் கொண்டனர். இந்த மன்னர் தமது குறுகிய கால ஆட்சியில் ஆன்மீகச் செழுமைக்கும் மொழி வளர்ச்சிக்கும் 1. Rajayyan, Dr. - History of Madura - (1974) Page