பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சேதுபதி மன்னர் இராமநாதபுரம் கோட்டையை முறறுகையிட்டதுடன் இராணி முத்துத் திருவாயியை சரண் அடையுமாறும் ஆர்க்காட்டு நவாப்பிற்குக்கப்பம் செலுத்த ஒப்புதல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த யோசனைகளை இராணியார் முழுவதுமாக மறுத்துப் போரினை மிகுந்த தைரியத்துடன் நடத்தினார். 3.6.1772ல் 3000க்கும் மேற்பட்ட மறவர்களைப் பலியாகக் கொண்ட இந்தப் போர் தோல்வியில் முடிவுற்றது இருந்தாலும் ராணியாரின் துணிச்சலும், வீரச் செயல்களும் பாராட்டப்பட வேண்டியவை. இந்த வரிசையில் இரண்டாவது பெண்மணியான ராணி மங்களேஸ்வரி நாச்சியார் 29.4.1803ல் இராமநாதபுரம்ஜமின்தாரினியாக நியமனம் பெற்றார். இவரது 10 வருடகால ஆட்சியில் இராமநாதபுரம் ஜமின்தாரியின் பல அறப் பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் சொக்கநாதர் கோயில் ரீ உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் மற்றும் நயினார் கோயில், அகத்தியர் குட்டம்பூரீனிவாசப் பெருமாள் கோவில் ஆகியவைகளில் பல திருப்பணிகளை இவர் மேற்கொண்டார். மேலும் சத்திரக்குடி, இராமநாதபுரம், உத்தரகோசமங்கை ஆகிய ஊர்களில் யாத்திரிகர்களுக்கு புதிய சத்திரங்களையும் அமைத்தார். இத்தகைய் சிறப்பான நிர்வாகிகளின் வரிசையில் வந்த இராணி வீராயி நாச்சியார் இராமநாதபுரம் சொக்கநாதர் கோயிலுக்கு எதிர்ப்புறம் அன்ன சத்திரம் ஒன்றையும், இராமேஸ்வரம், கன்னியாகுமரி சாலையில் இதம்பாடலில் பிறிதொரு சத்திரத்தையும் ஏற்படுத்தினார். இவரது திருப்பணிகள் பற்றிய மூன்று கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவைகளை இப்பொழுது பார்க்கலாம். - - இதம்பாடல் கிராமம் கண்மாய்க் கரையில் அமைந்துள்ள இந்த சிறிய கோயிலில் இந்தக் கல்வெட்டுக் காணப்படுகிறது. -