பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சேதுபதி மன்னர் l இயல் 36 | காரடரந்தக் குடி கல்வெட்டு இராமசாமி சேதுபதியின் காலத்தில் வழங்கப்பட்ட தான சாசனங்களில் ஒன்றைப் பற்றிய கல்வெட்டு மட்டும் தான் நமக்குக் கிடைத்துள்ளது. அந்தக் கல்வெட்டு கார் அடர்ந்த குடி என்றக் கிராமத்தில் நாட்டப்பட்டுள்ளது. காரடாந்தக்குடி கிராமம் இன்றைய பரமக்குடி வட்டத்தின் மூலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கல்வெட்டு காடரந்தக்குடி கிராமத்தில் பள்ளிக்கூடத்தின் பின்புறத்தில் நாட்டப்பட்டுள்ள ஏழடி உயரக்கல் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாகப்பாம்புகள் உருவங்களுக்கு இடையில் காணப்படும் இந்தக் கல்வெட்டில் இராமசாமி சேதுபதி நயினார் கோவில் நாகநாத சுவாமி பூஜை நைவேத்தியத்திற்குாக கார்டரந்தக்குடி ஏந்தலையும் அதையொட்டிய காட்டையும், தானமாக வழங்கிய செய்தியைத் தெரிவிக்கிறது. மேலும் நயினார்கோவிலின்