பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ՅC) சேதுபதி மன்னர் l இயல் 38 | இராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி கோயில் கல்வெட்டு இராமநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்னர்களது குல தெய்வமாகப் போற்றப்படுவது ராஜராஜேஸ்வரி அம்மனது ஆலயமாகும். இந்த ஆலயத்தினைக் கி.பி.1658ல் நிர்மானித்தவர் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதி ஆவர். மன்னர் திருமலை நாயக்கருக்காக கன்னடப் Lהה5ו I-55 5הםה FTT கி.பி.1650-ல் வெற்றிகொண்டு மதுரை நாயக்க அரசினை நிலை நிறுத்திய திருமலை சேதுபதி மன்னரைப் பாராட்டி மதுரை திருமலை நாயக்க மன்னர் அளித்த பரிசுகளில் ஒன்றாக அமைந்தது இந்த ஆலயத்திலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மனது பொன்னாலான திருமேனியாகும். இந்த அம்பாளுக்கு ஆண்டுவிழா நடத்தும் வகையில் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதி விஜய நகரம் மதுரை ஆகிய நகர்களில் நடைபெறுவதைப் போன்று புரட்டாசித் திங்களில் பத்து நாள் தசரா