பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 எஸ். எம். கமால் முனிவர் பாடிய 'திருவிளையாடற் புராணத்தில் ஐம்பத்து ஒன்பதாவது படலமாகவும் விரித்து பாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நினைவூட்டும் திருவிழா இராமேசுவரம் திருக்கே ாயி லிலும் பெருவிழாவாக நடைபெற்று வந்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த விழாவிற்காக வழங்கப்பட்ட ஊர் அரும்பூர் குரத்தில் முகிழ்த்தகம்’ கிராமமாகும். இன்றைய இராமநாத புரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்தில் திருவாடானைக் கும் தொண்டிக்கும் இடையில் அரும்பூர் உள்ளது. அரும்பூர் கூற்றத்தில் என்பது அரும்பூர் குரத்தில் எனச் செப்பேட் டில் திரிபு பெற்றுள்ளது. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் மலர் கள் மிகுந்து இ ருந்த காரணத்தினால் அரும்பு ஊர்” என்ற காரணப் பெயராக 'அரும்பூர் ஏற்பட்டு இருக்க வேண்டும் இதனை, இந்த ஊரிலும் இதனைச் சூழ்ந்த பன்னிரண்டு ஊர் களிலும் 1. திருவெற்றியூர், 2. முகிழ்த்தகம், 3. கொட்டகுடி 4. கள்ளிகுடி 5. விளத்துார், 6. சூரம்புளி 7. அரும்பூர் மேல அரும்பூர், 8. கீழப்பனையூர், 9. ஆ பிரவேலி, 10. அறுநூத்தி மங்கலம் 11. வாகைக்குடி, 12. பேரவயல் உள்ள 'அரும்பு குத்தி வேளாளர் என்ற மக்கட் பிரிவினர். உறுதிப்படுத்து கின்றனர். அரும்பு எடுத்தல்' அரும்புகுத்தி என்பது, வெற்றிலை கிள்ளுதல் என்றார் போல அரும்பு குத்தி என்பது வட்டார வழக்கு. அத்துடன் இந்த வட்டாரத்தில் உள்ள பல ஊர்கள், காட்டையும் மலரையும் கொடியையும் தங்கள் பெயர் விருதிகளாகக்கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. காரங் காடு கொடிக்குளம் காடாங்குடி தளிர் மருங்கூர் கார் கமலம் தாழையூர் கீழ் பனையூர் நம்பு (நல்ல) தா ைழ 1) வேம்பத்துார் பெரும்பற்றப் புலியூர் நம்பி - திருவாலவா யுடையார் புராணம் (டாக்டர். உ.வே.சாமினாதையர் பதிப்பு) 2) பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம் (சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் - 1932) - பக்கம். 452.