பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எஸ். எம். கமால் சேதுகாவலப்புரையர் எனக் குறிக்கப்பட்டுள்ளனர். பதினைந் தாம் நூற்றாண்டில் அவர்கள் சேதுகாவலர் என்று வழங்கப்பட்ட செய்தி இதன் மூலம் தெரியவருகிறது. பதினான்காம் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் இராமநாத புரம் சேதுபதி மன்னர்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லாத தால் தொடர்பு அற்ற நிலை. இந்தக் காலக்கட்டத்தில், மதுரை யைத் தலைநகராகக் கொண்டு பாண்டியநாடு முழுவதையும் சோழநாட்டின் ஒருபகுதியையும் மதுரை சுல்தான்கள் தங்கள் ஆட்சியில் வைத்திருந்ததும், இதற்கு ஒரு காரணமாகக் கொள்ள லாம். அப்பொழுது தஞ்சை, நெல்லைப் பகுதிகளில் செல்வாக் கும், வலிமையும் குன்றியிருந்த பாண்டிய மன்னர்களைப் போன்று, அப்பொழுதைய குழப்பநிலையில் சேதுபதிகளைப் பற்றிய செய்திகளும் இல்லை. ஆனால் அவர்கள் பட்டணத்தில் (தற்போதைய பெரியபட்டினத்தில்) இருந்து ஆட்சிசெய்தனர் என்பதற்கு வடநாட்டு வரலாற்று ஆசிரியர் அமீர் குஷ்ர்ரூவின் ஆவழிகா' வில் உள்ள செய்தி ஆதாரமாக உள்ளது. ? இந்தச் செய்தியின்படி தில்லித் தளபதி குஸ்ருகான் கி.பி 13 18 ல் இாா மேசுவரம் வரை சூறாவளிப் படையெடுப்பினை மேற்கொண்டபோது இராமேசுவரத்திற்கு சற்று முன்னதாக i னத்தில் ' மறவர்குல அரசர் ஆட்சி செய்ததாகவும் குஸ்ருகானின் படைகள் அங்கு வருவதை அறிந்து முன்னதாகவே அங்குள்ள மன்னரும், மக்களும் பயந்து காட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டதாகவும் குறிக்கப்பட்டு இருப்பதால், அந்த மன்னர் சேதுபதி என நம்புவதற்குரியதாக ந11 இருக்கிறது. ஏனெனில் இந்தப் பெரிய பட்டினத்தில் தொடர்ந்து மறவர்கள் மிகுந்து இருந் ததையும் மறவர்களது தலைமைப் பட்டணமாகிய இந்த ஊரில் மக்களை சீர்திருத்த கிறிஸ்துவமத பாதிரிகள் முயற்சிகள் மேற் கொண்டுள்ளதையும் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு வருகை தந்த ஜான் நியூப் என்ற டச்சுப் பாதிரியரது குறிப்பில் காணப்படுகிறது. 12) அப்துல் மஜீது-தொல்லியல் கருத்தரங்கு (1983) பக்கம் 100 13) Krishnasamy Avyangar. S. Dr – South India and her - Mohameden invorders (1921) pp; noo-1O' Sath yanatha Ayyar K History Nayaks of Madura (1924) рр : З26—27 14)