பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 305 யும் வழங்கப்பட்டன. இராமேசுவரம் பாதையில் கள்ளர் தொல் லையைக் களைந்து மன்னர் மனநிறைவு கொள்ளும் வகையில் பணியாற்றியதால் மலங்கரை கிராமம் சேர்வைக்காரனுக்கு தானமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கிராமத்தின் நான்கெல்கைகளிலிருந்து இன்றைய இராமநாதபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் அந்த ஊர் அமைந்திருந்ததாகக் குறிக்கப்படுகிறது, அந்த ஊரின் பெயர் இன்று வழக்கில் இல்லை. இந்தச் சிற்றுாரின் தெற்கு எல்கை யாகக்காண்பிக்கப்பட்டுள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் இன்றும் இருந்துவருகிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதன் முறையாக இந்தப்பகுதியில் குடியேறிய ஆயிரவைசிய மக்கள் அவர்களது வணிகத்திற்குக் கடவுளான விநாயகரை ஒரு மரக் கட்டையில் அமைத்து இங்கு அவர்கள் வழிபட்டதனால் அந்த ஆலயம் கட்டைப்பிள்ளையார் கோவில் என்று இருந்து பின்னர் காட்டுப்பிள்ளையார் கோவில் எனத் திரிபு பெற்றதாகவும் தெரிகிறது . இந்தக் கோயிலுக்குக் கிழக்கேயுள்ள மல்லம்மா தோட்டம் இன்று நல்லம்மா தோட்டம் என்று வழங்கப்படுகிறது, சோளகை சேர்வைக்காரன் இராமநாதபுரத்திற்குக் கிழக்கே இரண்டுகல் தொலைவில் உள்ள இளமனேரியில் குடி யேறினதாகவும், பின்னர் அந்த ஊரினை வெட்டித்திருத்தி சாணார், கைக்கோளர், ஆகிய குடிகளையும் அங்கு கொண்டு போய் குடியேற்றியதை இந்தச் செப்பேட்டிலிருந்து தெரிய முடிகிறது. இளமனேரி இன்று இளமனூர் என்ற பெயரில் உள்ளது. இந்த ஊரினை தானமாக வழங்கிய கிழவன் சேதுபதி தாமே ஒரு சிறந்த வீரராக இருந்ததுடன் வீரத்தில் மிக்கவரை நன்கு போற்றிப் புரந்தார் என்பதற்கு இந்தச் செப்பேட்டில் வெகு மதியும் குதிரையும் கொடுத்து மேற்படியாருக்கு சீவனத்துக்கு இளமனேரியில் காடுகளை வெட்டிக் குடியேத்திவிச்சு என்ற வரி 35, 37 லிலும் உம்பளம், சம்பளம், நிலங்கரை சகலமும் வழங்கி’ என வரி 47, 49 லும் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து இதனைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 1. முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு மலர் (1975)