பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.42 எஸ். எம். கமால் அமைந்திருந்தது. இந்தமன்னர் முதலில் சீமையின் நிர்வாகத்தை செம்மை செய்தார். மதுரைச் சீமையில் இருந்து வேளாளப் பெருமக்களை வரவழைத்து கிராம நிர்வாகப் பதிவேடுகளை பராமரிக்கச் செய்தார். கமுதி, இராஜசிங்க மங்கலம், ஓரியூர், அறந்தாங்கி, பாம்பன் ஆகிய ஊர்களில் வலிய அரண்களை அமைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிமிக்கதாக ஆக்கினார். மற்றும் இவர் சிறந்த கலா ரசிகராக இருந்ததால் இசையும் கூத்தும் இவர் ஆட்சியில் நாடு முழுவதும் வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டது. கோநகர் இராமநாதபுரத்தில் இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற கலையரங்கம் ஒன்றை அமைத் தார். இவற்றுக் கெல்லாம் மேலாக இராமலிங்க விலாசம் அரண் மனையைக் கண்ணைப் பரிக்கும் வண்ண ஒவியங்களின் கலைப் பெட்டகமாகச் செய்தார். இங்ங்னம் நிர்வாகத்திலும் கலை வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், தமது முன்னோரை அடியொற்றி, தெய்வீகத் திருப்பணிகளில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இராமேசுவரம், திருப்புல்லாணி இராமநாத புரம், திருப்பெருந்துறை, ஆகிய ஊர்களின் திருக்கோயில் களுக்குப் பல ஊர்களை சர்வமானியமாக வழங்கினார். இராமேசு வரம் பணி இராமநாத சுவாமி உலா வருவதற்கு அழகிய தேர் ஒன்றினையும் பள்ளியறை சயனத்திற்கு ரூ.18680 ரூபாய் எடை வெள்ளி ஊஞ்சல் ஒன்றையும்’ அமைத்து வழங்கிய செய்திகள் உள. சேது யாத்திரை வரும் பயணிகளுக்குத் தீர்த்தாண்ட தானத்திலும் இராமநாதபுரம், இலட்சுமி புரத்திலும் அன்ன சத்திரங்களை நிறுவிப் பயணிகளது பசியும் களைப்பும் திர உண்டியும், உறையுளும் அளிக்க ஏற்பாடு செய்தார். மண்டபம் தோணிக்கரைக்கும் பாம்பனுக்கும் இடையில் பயணிகளுக்கு போக்கு வரத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். பாம்பனில் இந்தப் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்த மன்னரது மருகர் தண்டத்தேவர், தவறு ஒன்று இழைத்தார் என்பதற்காக அதனை _ 1. பலபட்டடை சொக்கநாதப்புலவர் - தேவை உலா (உ.வே. சா. பதிப்பு) 2. இராமேசுவரம் திருக்கோயில் கல்ட்ெடு ASSI. Vol. Iv (1886) p. 60