பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 547 எல்கை மாலில் குறிக்கப்பட்டுள்ள ஆட்டாங்குடி, அரியாங் கோட்டை, புளியாத்திக் கண்மாய், நகரம் ஆகியவை இன்றும் வழக்கில் உள்ளன. தானம் பெற்ற வெங்கிட நாராயண அய்யங் காரது ஊரான ரெங்கநாதபுரம் எங்குள்ளது என்பது அறியத் தக்கதாக இல்லை. இந்த தானம் வழங்கப்படுவதற்கு முன்னர், இந்த கிரா மத்தில், பறைத்தொழில், மழித்தல் தொழில் ஈடுபட்டு இருந்த வர்களுக்கு காணிகள் அளிக்கப்பட்டு இருந்ததை, எல்கைமாலில் காட்டப்பட்டுள்ள பறையன் உம்பளம், நாவிதன் உம்பளம் என்ற தொடர்கள் தெரிவிக்கின்றன. மற்றும் வரிகள், 28, 29ல் குறிப் பிடப்பட்டுள்ள நகரம், இன்று நகரமங்கலம் என வழங்கப்படு கிறது.