பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர் எண் 90 ஒலைப்பட்டயம் (விளக்கம்) 1. பட்டயம் வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி 2. பட்டயம் பெற்றவர் : மாளுவநாதசுவாமி கோயில் அனுமந்தக்குடி 3. பட்டயத்தின் காலம் : சகம் 1705 சுபகிருது மார்கழி மாதம் 27தேதி 4. பட்டயத்தின் பொருள் : வடக்குச் செய்யானேந்தல் கிராமம் தானம் முந்தைய காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களாக ஒலைப்பட்டயங்கள் இருந்தன. இசைவுமுறி, பிடிபாடு, விடுதலை போன்ற பொதுக்காரியங்களுக்கும் கிரயம், போக்கியம், பத் தடைப்பு, காணியாச்சி, உரிமைமாற்றம், தானம் போன்ற நிலம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளுக்கும் ஒலை நறுக்குகள் பயன்படுத்தப்பட்டன. இவைகளில், உரியவர், ஒப்பமும் சாட்சி களின் கைச்சாத்தும் பெற்றவுடன் அவை ஆவணங்களாகக் கருதப்பட்டன. எழுத்தாணியினால் வரையும் வழக்கத்திலான இந்த ஒலைப்பட்டயங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வழக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அருகி மறைந்து விட்டன. அத்தகைய ஆவணங்களில் ஒன்றைப் பற்றிய செய்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சேதுபதி மன்னர்கள் பொதுவாகத் திருக்கோயில் மடம், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் ஆகியோருக்கு வழங்கும் தானங்களுக்கும் செப்புப் பட்டயங்களைப் போன்று