பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 24 எஸ். எம். கமால் - _-_** * * தானம் பெற்ற இராமைய்யன் விஜயநகரத்திலிருந்து வந்தவர் என்றும் வடமொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்தவ ரென்பதும் தெரியவருகிறது. திருப்புல்லாணியிலுள்ள இராமைய் யனது பதிமூன்றாவது தலைமுறையினரான பண்டா சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் அவரது முன்னோரான இராமையன் னுக்கு சாகித்ய சிரோன்மணி என்ற விருது இருந்ததாகவும், வடமொழி இலக்கியங்களின் சாகரமாக அவர் திகழ்ந்தவரென்றும் அன்னா ரைப் பற்றி பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார். இந்தச் செப்பேடும் அவரிடத்திலேதான் உள்ளது. தானம் வழங்கப்பட்ட சேரந்தையின் பெருநான் கெல்கை களான அந்திரன்குளம், இறையானேந்தல், நரசிங்கனேந்தல், தனிச்சயம் என்ற ஊர்கள் காட்டப்பெற்றுள்ளன. ஐந்திரம் என்ற பழம்பெரும் இலக்கண நூல் பெயரிலமைந்த ஒருவரின் பெயராக அந்திரன்குளம் ஏற்பட்டுள்ளது. தனிச்சந்தை என்ற பெயர் தனிச்சயமாக திரிந்துள்ளது. மதுரை மாவட்டத்திலும் ஒரு தனிச்சயம் இருக்கின்றது. ஐம்பத்திரண்டு வரிகளில் வரை யப்பட்டுள்ள இந்த செப்பேடு மிகவும் பிழையான சொற்களுடனும் தமிழாகிய வடமொழிச் சொற்களுடனும் காணப்படுகின்றது. கொடையினைப் பெற்ற இராமையனது ஊராகிய மாங் குண்டு இப்பொழுது மண்குண்டு என வழக்குப் பெற்றுள்ளது அத்துடன் இந்த சிற்றுாரில் இப்பொழுது அந்தணர் குடியும் இல்லை.