பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 எஸ். எம். கமால் == 7. பதினெட்டுக் கூட்ட வன்னியர்கள் கண்டன் 8. கோடி சூரியப்பிரகாசன் 9. திரு இருக்கும் மார்பன் கி. பி. 1730ல் சிவகெங்கைச் சீமையென்ற புதியதொரு தன்னரசு மறவர் சீமையின் பகுதியினின்றும் தோற்றுவிக்கப் பட்டதுடன் ஆட்சிப் பரப்பிலும் திறத்திலும் வலிமை குன்றிய அரசராக சேதுபதி ஆகிவிட்டதனால் சிறப்பித்துச் சொல்லத்தக்க அவர்களது வீரச் செயல்களுக்கு வரலாற்றில் இடமில்லை. ஆதலால் மேலே கண்ட விருதாவளிகள் அனைத்தும் பொருளற்ற தாக இருப்பினும் சம்பிரதாயத்திற்காக இந்தச் செப்பேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி ஆட்சிக்காலத்தில் அமைத்துதவிய மடம், சாருவூரனேந்தல் கிராமத்தில் பழுதடைந் திருந்ததால் அதனையும் அதனையொட்டிய ஊரணியையும் பரி பாலனம் பண்ணிவிக்க பள்ள உலகாண்டிக்கு இந்தச் செப்பேடு வழங்கப்பட்டுள்ளது. சில பயனுள்ள செய்திகளும் இந்தச் செப்பேட்டில் பொதிந்துள்ளன. பாட்டாளி மக்களாகிய பள்ளர் வகுப்பினர், மிகுந்த ஊராக இந்த ஊர் அமைந்து இருந்ததை யும் அவர்களில் செல்வாக்கு மிக்கவர் உலகாண்டி என்பதும் தெரிய வருகிறது. இந்த மடத்தினை பரிபாலனம் செய்வதற் காக அதே ஊரில் பதின்கல விரையடி நிலம் அவரிடம் கை யளிக்கபட்டதையும், இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. சம்பந் தப்பட்ட நிலத்திற்கான நான்கெல்கைகளும் அந்த நிலத் திலிருந்து மன்னருக்கு இறுக்கப்பட்ட வரியிறை, எச்சோறு, வரிச் சோறு, ஆடோட்டி, மாடோட்டி ஆகியவைகளும் இந்தச் செப் பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த தர்மத்துக்காக அனைத்து கிராமங்களிலும் குடி ஒன்றுக்கு இரண்டு படி நெல் அளந்து கொடுக்கவும் மன்னர் கட்டளையிட்டுள்ளார். முந்தைய செப்பேடு களில் கண்ட, கீதாரம், நன் மாட்டு சுரபிக்காத வரி, போன் றவை இங்குகுறிப்பிடப்பட்டுள்ள ஆடோட்டி, மாடோட்டி ஆகும். இவைகளுக்கெல்லாம் மேலாக அன்றைய காலகட்டத்தில் கிராமங்கள் தேவதாயம், பிரம்ம தாயம், பண்ணை, சிறு தேட்டு என்று வகைப்படுத்தப்பட்டிருந்ததையும் குடிகளுள் நாயக்கர்,