பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 எஸ். எம். கமால் இருந்தனர். இவர்கள் சிவியர் 5T5TJI வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர்கள் இராமநாதபுரம் சீமையின் வடக்கு மேற்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கும் இடைகுடி மக்களது ஏனைய பிரிவினர்களுக்கும் கொள்வினை, கொடுப்பினைத் தொடர்புகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது. செட்டி என்ற பிரிவுகளில் மூன்று வகையான மக்கட்பிரிவினர் அடங்குவர். முதலாமவர் இந்த சேது சீமையின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆயிர வைசியர் என்ற தொகுதியினர். இவர்கள் அனைவரும் உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதே பிரிவைச் சேர்ந்த ஒரு சிறு தொகுதி திருமலை ரெகுநாத சேதுபதி காலத்தில் மதுரையில் இருந்து வந்து இாாமநாதபுரம் கோட்டையின் கிழக்கே லட்சுமிபுரத்திற்கு மேற்கே குடியேறினர். இவர்கள் நாளடைவில் மதுரைச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இவர்கள் பொதுவாக வாணிபத்தில் ஈடுபட்டு இருந்தனர், இவர்களில், பதினெட்டாம் நூற்றாண்டில், முத்து சாத்தகுட்டி செட்டி மகன் முத்து கூரி செட்டி என்ற சிவனெறிச் செல்வரையும் சோழ சீமையுடன் தானிய வியாபாரத்தில் ஈடு பட்ட சிவந்தி செட்டி என்ற பெருமகனையும் பற்றிய செய்தி செப்பேடுகளில் இருந்து தெரிய வருகிறது. இவர்களைப் போன்று சோழவள நாட்டில் இருந்து குடியேறி தெலுங்கு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட வணிகர்களும் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இவர்கள் இராமநாதபுரம் கோட்டையிலும், இராமேசுவரம் நகரிலும் மட்டும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் இன்னொரு வகுப்பினர் செக்குகள் அமைத்து எண்ணெய் வடித்து, எண்ணெய் விற்று வந்தனர். இவர்கள் பிற்கால சோழ பாண்டியர் கல்வெட்டுக்களில் சங்கரப்பாடியர், மாயிலட்டி, சோதி நகரத்தார் என்ற சமூகத்தினராகக் குறிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் ஏனைய செட்டிகளினின்றும் வேறானவர் களாக இருந்த பொழுதிலும் உலக வழக்கில் இவர்களும் செட்டி கள் என்றே வழங்கப்பட்டனர். திருக்கோயில்களில் நந்தா விளக்கு எரியச் செய்வதற்கும், சனிக்கிழமைகளில் தெய்வத்திருமேனி 16. இராமநாதபுரம் பூரீ முத்தால பரமேசுவரி அம்பாள் கோவில் திருக்குடமுழுக்கு விழா சிறப்புமலர் (1977)