பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 சேதுபதி மன்னர் செப்பேடுகள் கி.பி. 1783ல் இராமநாதபுரம் சீமைப் பிரதானியாக இருந்து நிர்வாகத்திம் பல அரிய சாதனைகளை இயற்றிய முத்திருளப்பபிள்ளை என்பவர் மாகாணிக்கோலுக்கு மாற்றமாக புதியகோல் முறை ஒன்றைப் புகுத்தியதாகத் தெரிகிறது. ஆங்கி லேயர் இந்தச் சீமையைத் தங்களது உடமையாக்கிய பிறகு கி.பி. 1814ல் ஆங்கில நாட்டு ஏக்கர், செண்ட் சங்கிலி முறையை புகுத்தியதால் இந்தக் குளப்பிரமாணம் காலவாதியாகிவிட்டது. முத்துச்சி லாபதானம் : அந்தணர்களுக்கும், மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்படும் பொன், பொருள், பூமி, அணிமணிகள் ஆகியன தானத்துக்குரியவை. இவை முப்பத்திரண்டு வகையின என்றும் நாற்பத்தியிரண்டு வகை என்றும் சில நூல்களில் வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. தை, மாசி, ஆடி, கார்த்திகை மாதங்களில், அமாவாசை, பெளர்ணமி, உத்தராயணம், துவாதசி, புண்ணிய காலங்களில் இந்த தானங்களை வழங்குவது புண்ணியம் பயக்கக் கூடியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான காலங் களிலேயே சேது மன்னர்கள் திருக்கோயில்களுக்கும். தனியார் களுக்கும், தான சாசனங்கள் வழங்கியுள்ளனர், இந்தத் தொகுப் பில் கண்ட செப்பேடுகளில் வழங்கப்பட்ட தானங்கவில் அமாவாசை நாட்களில் வழங்கப்பட்டவை இருபத்து ஏழு ஆகும். மேலும் இந்தப் புனித செயல்களுக்குக் கூடுதலாக புண்ணியம் சேர்ப்பது போல இந்தத் தான சாசனங்களை சேதுக்கரையிலும் ஆதி சேதுவிலும், இராமநாத சுவாமி சன்னதியிலும், சேதுபதிகள் வழங்கியதைச் செப்பேடுகளில் காணமுடிகின்றது. உடமையை மட்டுமல்லாமல் உயிரோடு இயைந்த உடலை யும் தானம் வழங்கும் வழக்கம் முன்னர் இருந்தது. மாணிக்க வாசகரால் புகழ்ந்து பாராட்டப்பட்ட இரதண்டாவது வரகுண பாண்டியன் தமது ஆருயிர் துணைவியை திருவிடைமருதுாரில் மருதீசருக்குத் தானம் வழங்கியது ஒரு எடுத்துக்காட்டாகும். முத்துச்சிலாபம் போன்ற உரிமையினை சேது மன்னர்கள் திருக்கோயில்களுக்குத் தானம் வழங்கியிருப்பது வரலாற்றுப் பெருமை கூறும் நிகழ்வுகள் ஆகும். இந்த மன்னர்களுக்கு மன்னார்குடாக் கடலில் இருந்த முத்துக் குளிக்கும் உரிமையினை