பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/951

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 83 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துவிஜய ரெகுநாத சேதுபதி யின் தம்பி முத்து ரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : திருப்புல்லாணி திருக்கோவில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1651 செளமிய ஆண்டு தை அமாவாசை நாள் (கி.பி. 7-1-1730) 4. செப்பேட்டின் பொருள் : திருப்புல்லாணி கீழைக்காட்டுப் * . பகுதி திருக்கோயிலுக்கு சர்வ மானியம் இந்தச் செப்பேட்டை வழங்கிய முத்து ரெகுநாத சேதுபதி முத்து விசைய ரகுநாத சேதுபதி மன்னரது இளவல் மறவர் சீமையின் மன்னராக இவர் இருந்ததாக எந்த வரலாறும் இல்லை. ஆனால் இந்தச் செப்பேட்டில் 'முத்துவிஜய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தம்பி’ என்று இவர் குறிக்கப் பெற்றுள் ளார். இராமநாதபுரம் சீமை வரலாற்றில் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி இறந்தபிறகு சுந்தரேச தண்டத்தேவர் என்பவர் ஒரு குறுகிய காலம் சேதுபதியாக இருந்ததாகவும் அவரை வென்று கொன்றுவிட்டு பவானி சங்கரத்தேவர் என்பவர் ஆட்சியைக் கைப்பற்றியதாக இராமநாதபுரம் மேன்யுவலில் குறிக்கப்பட்டுள் ளது. "இதனைப் பொய்யாக்கும் வகையில் இந்தச் செப்பேடு,

  • Raja Ram Rao. T. Manual of Ramnad Samasthanam (1891)

page. 238