பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இயற்கை வருணனை சுவைபடச் சொல்ல வேண்டுமானால் கற்பனை மனம் வேண்டும். கற்பனை மனம் உள்ளவர்களுக்குப் பொருள் களை வருணிக்கும் ஆற்றல் தன்னால் வரும். இயற்கைக் காட்சிகளை வருணித்துள்ள அ ழ ைக நற்றிணையில் «55 ГГGTTGl) гTLг). கருநிறமான குன்றில் வெண்ணிறமான அருவி ஒன்று தோன்றுகின்றது. அந்தக் குன்று பெரிய ஒற்றைக் கொம்பு உடைய யானை போல் தோன்றுகின்றது.24 எனவும் புலியோடு போர் செய்து அதனால் சிவந்து புலால் நாற்றம் பெற்றது ஆண் யானையின் கொம்பு எனவும், அந்தக் கொம்பினுள் இருந்த பல முத்துக்கள் ஒலிக்குமாறு வேங்கை மரத்தின் பருத்த அடிமரத்தை முறித்தது எனவும், கன்றோடு பெண் யானையைத் துதிக்கையால் தழுவிய வாறே சென்று வேங்கை மரத்தின் பொன் போன்ற பூங்கொத்துக்களில் உள்ள தேனிக்கள் ஒடுமாறு செய்து அவற்றைத் தந்து உண்ணச் செய்து பாதுகாக்கும் எனவும்: மலை சார்ந்த வழிகள் வருணிக்கப்படுகின்றன. காட்டில் கோங்க மரங்களில் மலர்கள் மலர்ந்து விளங்கும் காட்சி கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் விளக்குகளின் நீண்ட வரிசை போன்றது: என்றும், மாவின் அரும்புகளைக் கோதி உண்டு மகிழ்கின்ற குயில்கள் பாடும் நறிய தண்ணிய பொழில் மிகவுடையன காடுகள்27 என்றும் கூரிய நுனியையுடைய களாவின் மலர் ஒருங்கே மலர்ந்து மணங்கமழவும் பி டா ம ல ர் முறுக்குவாய் நெகிழ்ந்து மலரவும், மேகம் தான் செய்ய வேண்டிய மழை பெய்தலைச் செய்யத் தொடங்கிய அழகிய கார்ப் 24. நற்றிணை; 18 : 8-10. 25. 1, 5 202 : 1-7. 26. 9 : 202 נל. 27. 5 * 9 : 10-12.