பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.19. அவற்றைக் கனவென்று இரவலர் மயங்குமாறு நனவின்கண் நல்குபவன் 62 என ஒரு பாடல் குறிக்கிறது. * = அதியமான் பொகுட்டெழினி தன்னை நாடிவரும் இரவலரின் பாசினது வேர் போற் கிழிந்த உடையினைக் களைந்துவிட்டு, நுண்ணிய புதிய ஆடையினை அணிவித்து, தேளினது கடுப்புப் போல் நாள்படப் புளிப்பேறிய கள்ளை, பொன்கலத்தில் பெய்து உண்மினென்று கூறி விருந்துபசரிக்கும் தன்மையன் எனத் தெரிகிறது. வாட்டாற்று எழினி நீர்வளஞ் செறிந்த வாட்டாறென்னும் ஊர்க்குரியவ ன Iா கி ய எழினியாதன், கொழுவிய துண்டமாகிய ஆட்டிறைச்சியும், வளவிய பூந்தேறலாகிய கள்ளையும், குறுமுயலின் தசை விரவித் தந்த நறிய நெய்யையுடைய சோற்றையும், திறந்து பின் மூடுதற்கு மறந்தொழிந்த நெற்கரிசையிடத்து, அவரவர் வேண்டுமளவும் முகந்து கொள்ளப்படும் உணவுப் பொருளும் இ ர வ ல ர் க் கு நல்குவன் 84 என்று மாங்குடிகிழார் பாடுகிறார். சேரமான் வஞ்சன் இரவலரது வரவையறிந்து, அவரது ட ைழ ய ஆடையைக் களைந்து, புகைபோன்ற புத்தாடையை அணிவித்து, அவரது உண்கலத்தில் தெளிந்த கள் தெளிவைப் பெய்து, தான் உண்ணும் துண்டித்த மானிறைச்சியாகிய வறுத்த பொரிக் கறியையும், கொக்கின் நகம்போன்ற முரியாத நெல்லரிசிச் சோற்றையும், அவர் 62. புறநானூறு 387 : 20.27. 63. 5 5 392: 11-19. 64. * > 396 : 13.24.