பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கிள்ளியும் சமகால அரசர்கள் என்பதும், இவர்களைப் பாடியுள்ள குமட்டுர்க் கண்ணனாரும், கழாத்தலையாரும், பரணரும் சமகாலப் புலவர்கள் என்பதும் தெரியவரு கின்றன. பல்யானைச் செல்கெழு குட்டுவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல் யானைச் செல்கெழு குட்டுவனாவான். குடநாட்டை மாந்தை என்னும் கடற்கரை நகரிலிருந்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆட்சி செய்தான். இவன் குட்ட நாட்டை வஞ்சிமாநகரிலிருந்து ஆட்சி செய்தான். இவன் போர் செய்து நாட்டை விரிவுபடுத்துவதில் பெருவேட்கை காட்டினான். குட்டநாட்டுக்குக் கிழக்கில் தென் மலைத் தொடரின் மேற்கில் மணல் பரந்த பகுதி அந்நாளில் பூழி நாடு என்று வழங்கப்பட்டது. பூழி நாட்டில் வாழ்ந்தவர் பூழியர் எனப்பட்டனர். இப்பூழி நாட்டின் அண்மையில் அணிபெற விளங்கிற்றுத் தென் மலைப் பகுதி. இத்தென் மலையில் யானைகள் மிகுதி. பூழி நாட்டினர் யானையைப் பிடித்துப் பழக்கிப் போருக்கு ஆயத்தப்படுத்துதலில் வல்லவராவர். எனவே குட்டுவன் படை, யானைகளை மிகுதியாகப் பெற்றிருந்தது. இச்சிறப்புக் குறித்துக் குட்ட நாட்டுக் குட்டுவன், பல்யானைச் செல்குழு குட்டுவன் என வழங்கப்பெற்றான். அக்காலத்தில் இப்போது ஆனைமலைத்தொடர் என வழங்கும் தென்மலைப் பகுதியில் முதியர் என்பார் வாழ்ந்து வந்தனர். குட்ட நாட்டின் வடபகுதிக்கு நேர் கிழக்கில் வடமலைத் தொடரின்மிசை இருந்த பாயல் நாட்டுக் குறுநிலத் தலைவர் சிலர் அவ்வப்போது குட்டநாடு புகுந்து குறும்பு செய்யத் தலைப்பட்டனர். உம்பற்காட்டின் வடபகுதியில் அமைந்திருந்த அகப்பா என்னும் அரண் இவர்கட்குத் தலைமையிடமாக இருந்தது. இவ்வரண் உயரிய மதிலும் பெரிய காவற்காடும் கொண்டு பாது