பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 6. கருவூர்ச் சேரமான் சாத்தன் : கருவூரிலிருந்து ஆண்ட சேரவேந்தன் இவன் என்பது இவன் பெயரால் பெற்றாம். இவன் பாடியதும் ஒரு பாட்டே." அது குறுந்தொகையில் அமைந்துள்ளது. சிறைப்புறமாகத் தலைவன் நிற்கத் தலைவி தலைமகட்குக் கூறும் போக்கில் இப்பாட்டு அமைந்துள்ளது. 7. குட்டுவன் கண்ணன் : இப்பெயரால் குட்டுவனுக்கு மகன் கண்ணன் என்ற விளக்கத்தைப் பெறுகின்றோம். இவர் பாடிய பாடல் ஒன்றே குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. பகல் வந்து தலைவியைக் கூடிச் செல்லும் தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்தவள் போலப் பேசித் தலைவியை விரைவில் தலைவன் மணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தோழி கூறும் கூற்று நயமுடையது. 8. நம்பி குட்டுவன் : குட்டுவன் என்ற பெயரால் இவர் சேரர் மரபினைச் சேர்ந்தவர் என்பது புலப்படு கின்றது. இவர் இயற்றிய பாடல்கள் இரண்டே. அவை குறுந்தொகையில் அமைந்துள்ளன. இவை நெய்தல் திணையை விளக்குவனவாக உள்ளன. இப்பாடல்கள் தோழியின் பேச்சுத் திறனையும் தலைமகளின் பண்பு நலனையும் குறிப்பிடுகின்றன. IV. சேர வேந்தர் கிளையினர் 1. அதியமான் நெடுமான் அஞ்சி : அதியமான் என்போர் சேரவேந்தரின் ஒரு கிளையினராவர். தகடுர் என்பது இவர் தலைநகராகும். இம்மரபில் உதித்த நெடுமான் அஞ்சி தன் பெருங் கொடைத் திறத்தால் கடை யெழுவள்ளல்களுள் ஒருவனாக மதிக்கப் பெற்றவன். 29. 268. o 30. 179. 31. 109, 243. ജ