இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உரிமையரை.
சிந்தைவரு புகழ்ச்சேரன் செங்குட்டுவன்
சரிதந் திகழு மிந்நூல்
விந்தைமிகு தருமதுரை வியனகரிற்
றமிழ்ச்சங்கம் விழைந்து கூட்டிச்
செந்தமிழின் வளம் பெருக்கிச் சிறியேனும்
பெருமை பெறச் செய்த வண்மைச்
சுந்தரனாம் தமிழ்ப்பாண்டித் துரைக்குரிமை
யாகி நலந் துலங்க மன்னோ.
ஆக்கியோன்.