பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

121

வராகமலையில் உற்பத்தியாகி மாமரச்சோலைவழியே செல்லு தலால், இப்பெயர்கள் பெற்றதென்பர். “வஞ்சிப் புறமதிலலைக்கும் கல்லென் பொருநை” “தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்” என முன்னோர் கூறியவாறே, இக்காலத்தும், இவ் வாம்பிராவதி கருவூரையொட்டித் தென்றிசையிலிருந்து கீழ்புறமாகவோடி வடக்கே திரும்பிக் காவிரியுடன் கலக்கின்றது. இக் கருவூரே, வஞ்சி எனத் தமிழிலும், வஞ்சுளாரணியம் என வடமொழியினும் வழங்கப்படுவதாம் ;[1] “வஞ்சுளா ரணியம் வஞ்சி கருவூர்” என்பது கருவூர்ப் புராணம். இதற்கேற்ப, இந்நகரத்தின் தென்றிசையில் நதிக்கரையிலுள்ள துர்க்காதேவிக்கு வஞ்சியம்மன் என்னும் பெயர் இன்றும் வழங்கி வருதலும், இவ்வூர் அரங்கநாதப் பெருமாள் கோயிற் கர்ப்பக்கிரகத்தின் தென்பக்கத்துக்காணப்படும் சாஸனத்துள்ளே “வஞ்சி.... ஸ்ரீவைஷ்ணவரோம்” என்னுந்தொடர் காணப்படுதலும், ஆம்பிராவதிக்கு வடக்கே கோயில்கொண்ட[2] சிவபெருமான் வஞ்சுளேச்சுரலிங்கம் என அழைக்கப்படுதலும் இங்கு அறியத்தக்கன.

கருவூர்க்கு வடகிழக்கே, ஆம்பிராவதி மணிமுத்தாந்தி காவேரி மூன்றுங்கூடுந் திருமுக்கூடல் உள்ளது; “வஞ்சுளாடவிக்குத் தரகுணக்காக வாம்பிர வதிந்தி மதிபோல், விஞ்சுமா மணிமுத்தாறுகாவேரி மேவுழி மேவு மேவுதலால், எஞ்சலில் திருமுக்கூடலென் றிசைப்ப” என்பது கருவூர்ப்புராணம்.[3] இம் முந்நதியின் கூடலே “காவிரி யன்றியும் பூவிரி-


  1. வஞ்சிமரம் நிறைந்த காடாதலின் இப்பெயர்பெற்றதென்பர்.
  2. திருவானிலைப் பசுபதீசுவரர் கோயிற்குத் தென்பாலுள்ளது.
  3. ஆம்பிராவதிச்சருக்கம். 45 - மணிமுத்தாநதி, காவிரியுடன்