பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

135

என்னும் அடிகளது வாக்கின் போக்கால் அறியப்படுகிறது. மணிபல்லவத்தினின்று புறப்பட்ட மணிமேகலையும் முதலில் இச்செங்குன்றையடைந்து, தன் தாயாகிய அப் பத்தினியை ஆங்குத் தரிசித்தபின்பே வஞ்சி நோக்கிச் சென்றனளென உணர்க.[1] இச்செங்குன்று இப்போது செங்குன்றூர் என் னும் பெயருடன் மலைநாட்டில் [2] உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றின் மேல் மிகப்பிரபலம்பெற்ற பகவதிகோயிலொன்று உண்டு. இத்தேவிக்குத் திருவிழா முதலியவை பெருஞ்சிறப்புடன் நடைபெறுகின்றன. இப்பகவதியை மதுரை மீனாக்ஷியம்மனாக அப்பக்கத்தார் இன்றும் வழங்கிவருவதாகத்தெரிதல் ஆராயத்தக்கதேயாம்.



  1. மணிமேகலை 25-ம் காதை முடிவும், 26-ம் காதை முதலுங் காண்க.
  2. செங்குன்றூர், மலைநாட்டில் அகலப்புழைக்குத் தென்கிழக்கிலும் கோட்டயத்துக்குத் தெற்கிலும், உத்தேசம் 20-மைல் தூரத்துள்ளது.