பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சேரன் செங்குட்டுவன்


சிறப்பிப்பர்.[1] * இக்காலத்தே, நகரத்தாரெல்லாம் உற்சாக மிக்கவர்களாய்த் துருத்தி முதலியவற்றால் நீர் கொண்டு இறைத்து விளையாடி மகிழ்வர். மணிமேகலை மணிபல்லவத்தி னின்று வஞ்சிநகர் புகுந்த போது, செங்குட்டுவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதென்று தெரிகின்றது. இக்காலத் தும், திருவனந்தபுர அரசர்க்குள் ஜன்மதினக் கொண்டாட் டம் சிறப்பாகவே நடைபெறுதலோடு, அவ்வரசர் மூலம் திருநாள், விசாகத்திருநாள்' எனத் தங்கள் பிறந்தநாள்களை யே பெயராகக் கொண்டு விளங்குதலும் கண்டுகொள்க.


விசேட நாள்களிலே, அரசன் ஒரு தட்டில் பொன்னும், ஒருதட்டிற் றானுமாகத் துலையிலேறித் தன்னை நிறுத்து அந்நிறுத்த பொன்னை மறையவர்க்குத் தானஞ்செய்தல் மர பாகும். செங்குட்டுவன் கங்கைக் கரையிலே பத்தினிப்படி மத்தை நீராட்டித் தூய்மைசெய்த பின்னர், மாடலன் என்னும் அந்தணனுக்கு மேற்கூறியபடி தானஞ் செய்தான் என்று அடிகள் கூறுவர்.[2] இவ்வாறு துலாபாரதானம் செய்வது மலைநாட்டரசர்க்குள் இன்றும் நடைபெற்றுவரும் வழக்க மென்பது யாவரும் நன்கறிந்தது.


அரசன் மலைப்பிரதேசங்கட்குச் செல்லும்போது, அம் மலைவாணராகிய குன்றக்குறவர் தம் நாட்டிற் கிடைக்கக் கூடிய அரும்பொருள்களைச் சேகரித்து அவற்றைத் தலைமேற் சுமந்து கொண்டு கூட்டமாக வந்து அரசனை அடிபணிந்து

அவன் திருமுன்பு காணிக்கை வைப்பர்.[3] இம்மரியாதை


  1. தொல். பொருளதி. 91
  2. t சிலப். 27. 175-6.
  3. சிலப். 25. 35 - 56; இந்நூல். பக். 50 - 51.