பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சேரன்-செங்குட்டுவன்

சேரன் - செங்குட்டுவன் காப்பியனாரும். இந் நிலப்பரப்பு, தமிழ்நாடு, தமிழகம்[1] என வழங்கப்படும்.

இங்ஙனம் பழமையும் பெருமையும் படைத்த சேர சோழ பாண்டியர்களுள், முதற்கணுள்ளவரே இவ் வாராய்ச்சிக்கு ஏற்புடையவர். இவர்கள், சேரர் சேரலர் எனத் தமிழினும், கேரளர் என வடமொழியினும் வழங்கப்படுவர். இவ் வேந்தரது பூர்வசரித்திரமானது, ஏனைச் சோழபாண்டியருடையவை போலவே செவ்விதின் அறியப்பட்டிலதேனும், பண்டை யிலக்கியங்களிற் கூறப்படுமளவில், இவரது அருமையும் பெருமையும் வேண்டியவளவு விளங்குகின்றன. செந்தமிழ் வளர்த்தவர் என்ற பெருமை பாண்டியர்க்குரியதாகப் பழையவழக்குள்ளதென்பது உண்மையே. ஆயினும், தற்காலத்து வெளிவந்துள்ள சங்க நூல்களை ஆராய்வோமாயின், தமிழ்வளர்த்த பெரும்புகழிற் சேரருந்தக்க பகுதி பெறுதற்குரியர் என்பதோடு, அறிவுதிருவாற்றல்களில் இன்னோர் எனைத் தமிழ்வேந்தர்க்குக் குறைந்தவரல்லர் என்பதும் புலப்படும். இங்ஙனம் நூல்களிற்கண்ட சேரர் பெருமையனைத்தையும் இங்கே விவரிப்பது எம் கருத்தன்று. ஆனால், இவ் வமிசத்தவருள்ளே, கடைச்சங்க நாளில் விளங்கிய பிரசித்த வேந்தனொருவனைத் தமிழறிஞரும் சரித்திர நூலோரும் சிலகாலமாக நன்கு தெரிந்திருக்கின்றனர். இவன் பெயர் சேரன் செங்குட்டுவன் என்பது. தமிழ் நாட்டின் பழைய நிலைகளை ஆராயப்புகுந்த பண்டிதர் சிலர் தமிழ்ச் சரிதவுண்மைசிலவற்றைக் கண்டு வெளியிட்டதற்குப் பேருதவியாக நின்றது, இச் சேரவேந்தனது வரலாறேயாம். அதனால், வழிதிசை தெரியாமலிருந்த தமிழ்ச்சரிதத் துறை


  1. சிலப். 3. 37; பதிற்றுப். 2-ம் பதிகம் ; புறம் - 168.