பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12-ம் அதி:-

செங்குட்டுவன் குணாதிசயங்கள்.


சேரன் செங்குட்டுவன் இந்நிலவுலகில் ஐம்பத்தைந்து வருஷம் வீற்றிருந்தவனென்பது, பதிற்றுப்பத்துள் இவனைப்பற்றிய பதிகவாக்கியத்தால் அறியப்படுகின்றது. இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் தன் மக்களது இளமைக்காலத்து இறந்தவனென்று தெரிதலால், 20-ம் வயதிற் செங்குட்டுவன் பட்டமெய்தியவனாயினும், குறைந்தது 35 - வருஷம் இவன் ஆட்சிபுரிந்தவனாதல் வேண்டும். இவ்வரசன் இரண்டாம் முறையாகச் சென்ற வடயாத்திரையில் 32- மாதங்கள் செல் விட்டனனென்றும்,[1] * அவ் யாத்திரை முடித்துக்கொண்டு வஞ்சிமாநகரம் புகுந்தபோது இவனுக்கு 50-ம் வயது நடந்த தென்றும் இளங்கோவடிகள் தெளிவாகக் கூறுகின்றார். எனவே, செங்குட்டுவன், 47 - ம் வயதாம்பத்தே அவ்வட யாத்திரை தொடங்கினனென்று தெளியலாகும். இவனது 47-ம் வயதிற்குச் சில காலத்துக்கு முன்புதான், தன் மைத் துனச்சோழற்கு அனுகூலமாகச் சோணாட்டில் இவன் போர் நிகழ்த்தியது. போரின் விவரம் முன்னரே விளக்கப்பட்டது. செங்குட்டுவனது வடயாத்திரைக்குச் சிறிது முன்பே இவன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவிய செயல் நிகழ்ந் ததென்பது, கங்கைக்கரைப்பாடியில், மாடலனை இவன் சந்தித்தபோது, அச்சோழனது ஷேமத்தைப்பற்றி உசா

விப்போந்த குறிப்பால் புலப்படும். இச்சோன் தன் பெரிய


  1. * சிலப். 27. 149. ஷ. 28. 130. டி. 27.159 - 72.