பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணாதிசயங்கள்

155

.

மாகவே யிருந்தன. தன்னையும் மற்றைத் தமிழரசரையும் வீரக்குறைகூறி இகழ்ந்தார் என்பது பற்றியன்றோ, இமயச் சாரலிலுள்ள குயிலாலுவம்[1]* என்னும் போர்க்களத்தில், இவன் வடவரசர் பலரை

"அமையா வாழ்க்கை யாசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியுந் தரூஉம்."

(சிலப். 26. 10-12)

காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்முடன் கூடி
அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனச்
சீற்றங் கொண்டிச் சேனை செல்வது."

(ஷை ஷை . 159-62.)


என இவனது தமிழபிமானத்தை இளங்கோவடிகளே எடுத் துரைத்தல் காண்க. செங்குட்டுவனது பெரும்புகழ் தமி ழகத்தின் மட்டுமன்றி, வடநாடெங்கும் பரவியிருந்ததென்பது, இவனது யாத்திரையில், நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் இவனுக்குச் செய்து போந்த உபசாரங்களாலும், பிறவற் றாலும் தெளிவாகும். ஆயின், அசோகன் சமுத்திரகுப்தன்

முதலிய வடவேந்தரது தென்னாட்டு விஜயங்களை விளக்கும்


  1. * குயிலாலுவம், என்பது இமயமலையின் ஒரு பகுதியாய், உத்தர சோசலத்தைச் சார்ந்த ஒரு தலமாகத் தெரிகிறது. இங்குச் சிவபிரா னுக்கு ஒரு கோயிலும் இருந்ததென்பது, 'இமயச் சிமயத் திருங்குமி லாலுவத்து-உமையொரு பாகத் தொருவனை வணங்கி என்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறியலாம். (சிலப். 28. 102-8) புத்தாது பூர்வ அவதாரஸ்தலங்களுள் ஒன்றாகச் சொல்லப்படும் குயிலாலபுரம் என்பது இது போலும். (மணிமே. புத்தசரித், பக்கம். 2. கீழ்க்குறிப்பு.)