பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்

17


இச் செல்வக்கடுங்கோவுக்குப் பிறந்த வீரமகன் பெருஞ்சேரலிரும்பொறை என்பான். இவன் அதியமானது தகடூர்மேற் படையெடுத்துச் சென்று பெரும்போர் புரிந்து, அவ்வூரையும் அவ்வதியமானையும் அழித்தனன் . இப் போர்ச்செயலே தகடூர் யாத்திரை[1] என்னும் பண்டை நூலிற் சிறப்பித்துக் கூறப்படுவது. இவ் வெற்றிபற்றித் ‘தகடூரெறிந்த’ என்னும் அடையுடன் இவன் வழங்கப்படுவன். இப்பெருஞ்சோலை 8-ம்பத்தாற் புகழ்ந்தவர் அரிசில் கிழார் என்ற புலவர் பெரு மான். இவர் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இச்சேரன், தானுந் தன் மனைவியும் வெளியே வந்து நின்று ‘தன் கோயிலிலுள்ளனவெல்லாம் கொள்க’ என்று ஒன்பது நூறாயிரங் காணத் தோடு தன் அரசு கட்டிலையும்[2] புலவர்க்குக் கொடுப்ப, அவர் ‘யானிரப்ப நீ யாள்க’ என்று அவற்றைத் திரும்பக் கொடுத்து அவ்வரசனுக்கு அமைச்சுப் பூண்டார். இச்சேரன் பதினேழாண்டு வீற்றிருந்தான்.[3] இப்பெருஞ்சேரற்கு மனைவியாகிய அந்துவஞ்செள்ளை வயிற்றில் உதித்தவன் இளஞ்சேரலிரும்பொறை என்பான். இவன், தன்னை 9- ம்பத்தாற்பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு “மருளில்லார்க்கு மருளக் கொடுக்க' என்று உவகையின் முப்பத்தீராயிரங் காணங் கொடுத்து, அவரறியாமை ஊருமனையும் வளமிகப்படைத்து, ஏருமின்பமும் இயல்வாப் பாப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னீராயிரம் பாற்படவகுத்துக், காப்பு மறந் தான் விட்டான்” என்று கூறப்பட்டுளது.[4] இங்ஙன-


  1. இதனுட் சில பாடல்கள், தொல்காப்பியவுரை, புறத்திரட்டு முதலியவற்றிற் காணப்படுவதன்றி, நூன் முழுதும் இதுவரை வெளி வரவில்லை.
  2. சிங்காதனம்.
  3. 8-ம்பத்துப் பதிகம்.
  4. 9-ம்பத்துப் பதிகம்