பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்

19


சமீபித்த உறவினன் போலும். இவர்களன்றிப் பிற்காலத்தில் கணைக்காலிரும்பொறை[1] என்பவனொருவனும் இவர் வழியில் ஆண்டனன். இவரையெல்லாம் இரும்பொறை மரபினர் என்று நாம் கூறுதல் தகும். செங்குட்டுவன், இவ் விரும்பொறைமரபின் முன்னோருள் ஒருவனாகவும் கூறப்படு தலால்,[2] இம்மரபினரும் நம் சேரன்மரபினரும் நெருங்கிய தாயத்தார் என்பது தெளிவாகின்றது.


இரும்பொறை மரபினர்.

1. மாந்தரம் பொறையன் கடுங்கோ

2. கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரலிரும்பொறை

3. அந்துவஞ் சேர லிரும்பொறை.

4. செல்வக் கடுங்கோ வாழியாதன் ╳ பதுமன்றேவி.

5. தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை ╳ அந்துவஞ் செள்ளை.

6. இளஞ்சேர லிரும்பொறை.

7. யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை.

8. கணைக்கா லிரும்பொறை.


  1. புறம். 74. களவழி நாற்பது என்னுஞ் சிறுநூல், இவ்விரும் பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் நிகழ்ந்த கழுமலப்போரைப் பற்றிப் பொய்கையாராற் பாடப்பெற்றது.
  2. ‘கடலிருப்ப வேலிட்டும்’ என்பது செங்குட்டுவன் செய்தியாகும். (பதிற். 90.)