பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு சரிதநிகழ்ச்சிகள்.

43

செய்துகொண்டிருந்த பரதனென்பவன், இவன் பகைவனது ஒற்றனென்று பிடித்து அரசனுக்குக்காட்டி அவனைக் கொலை செய்துவிட்டான். அப்போது அச் சங்கமன் மனைவியாகிய நீலி யென்பவள் மிகுந்த துயரமுற்றுப் பதினான்குநாள் பல விடத்தும் அலைந்து, பின்பு ஒரு மலையின் மீதேறிக் கணவ னைச் சேர்தற்பொருட்டுத் தன்னுயிரை விட நினைந்தவள், ‘எமக்குத் துன்பம் விளைத்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக’ என்று சாபமிட்டிறந்தனள். அப்பரதனே கோவலனாகப் பிறந்தான். ஆதலால் நீங்கள் இத் துன்பம் அடைந்தீர்கள். இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்ற பின்பு, நீ உன் கணவனைக்கண்டு சேர்வாய்” என்று சொல்லி அவளைத்தேற்றி மதுராபதியாகிய அத்தெய்வஞ் சென்றது. பின்பு கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, வையைக் கரைவழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாடடைந்து செங்குன்றென்னும் மலையின்மேலேறி ஒரு வேங்கை மரத்து நிழலில் நிற்க, பதினான்காந்தினத்துப் பகல் சென்றபின்பு, அங்கே தெய்வவடிவோடு வந்த கோவலனைக் கண்டு களித்து அவனுடன் விமானமேறித் தேவர்கள் போற்றும்படி விண்ணுலகடைந்தாள்.

இவ்வளவே, சிலப்பதிகாரத்தின் மதுரை புகார்க் காண்டங்களிற் சிறப்பித்துக் கூறப்படுவது. மூன்றாவதான வஞ்சிக்காண்டமென்னும் பகுதியில், கண்ணகி விண்ணுலகஞ் சென்றதைக் கண்ணாரக்கண்ட வேடுவர்கள் திரண்டு, அவ் விசேடத்தைத் தம்மரசனாகிய செங்குட்டுவனுக்குத் தெரி வித்தது முதலிய செய்திகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றைச் ‘செங்குட்டுவன் வடயாத்திரை’யிற் கூறுவோம்.