பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு சரிதநிகழ்ச்சிகள்.

45

னுதவியால் அங்கேயுள்ள கோமுகியென்னும் பொய்கையை அடைந்து, அதிலிருந்த அமுதசுரபி என்னும் அக்ஷயபாத்திரம் தன் கையில் வரப்பெற்று, அப்பாத்திரத்துடன் தன் நகராகிய புகாரையடைந்து, அறவணவடிகளிடஞ் சென்று நிகழ்ந்தது கூறி வணங்கினாள். அம்முனிவர், ஆபுத்திரன் வரலாற்றையும், அவனுக்கு மதுரையிற் சிந்தாதேவியளித்த அமுதசுரபியே அவள்கைப் புகுந்ததையும், அப்பாத்திரத்தாற் பசித்தவுயிர்கட்கு உணவளித்தலின் சிறப்பையும் மணிமேகலைக்கு உணர்த்தினர். அவர் கூறியவாறே, உணவளித்தற்பொருட்டு, தான் பெற்ற அமுதசுரபியைக் கையிலேந்தின வளாய் மணிமேகலை வீதியிற் செல்ல, அவளது அக்ஷய பாத்திரத்தில் உத்தம பத்தினியாகிய ஆதிரையென்பவள் வந்து முதலிற் பிச்சையிட்டனள். பின்பு மணிமேகலை அப் பாத்திரத்தினின்று எடுத்துதவிய ஒருபிடியமுதால், காயசண்டிகை யென்னும் வித்யாதரமங்கையின் தீராப்பசியைப் போக்கி, அப்பாத்திரத்தில் மேன்மேலும் அமுது வளரப்பெற்று, அந்நகரிலுள்ள உலகவறவியென்னும் அம்பலத்தையடைந்து, அங்கேவந்த எல்லாவுயிர்களின் பசியையும் போக்கி, அவ்வறஞ்செய்தலையே நித்ய நியமமாகப் பூண்டிருந்தனள். அங்ஙனமிருக்கும் போது, சோழன் மகனான உதயகுமரன் தன்னை விரும்பி மறுமுறை அவ்விடம்வர, அதனையறிந்தமணிமேகலை அவன் தன்னை அறிந்துகொள்ளாவண்ணம் வித்யாதர மங்கையாகிய காயசண்டிகையின் வடிவங்கொண்டு அந்நகரத்துச் சிறைச்சாலையை யடைந்து ஆங்குப் பசித்திருப்பவர்க்கெல் லாம் உணவளித்து அதனை அறச்சாலையாக்கினாள். அப்போது அவ்விடத்துந் தன்னை விடாது தொடர்ந்த உதயகுமரன், காயசண்டிகையின் கணவனாகிய வித்யாதரனால் தன்