பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சேரன் - செங்குட்டுவன்

வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம்
இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்
கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையுங்[1]
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோட்டுணை[2] துறக்குந் துறவொடு வாழுமின்
தாழ்கழன் மன்னன் தன்றிரு மேனி[3]

வாழ்க சேனா முகம்”

என்று ஊரெங்கும் பறை அறையப்பட்டது.


3. கால்கோட் காதை.
செங்குட்டுவன் வடநாட்டிற்செய்த பெரும்போரும், இமயஞ்சென்று
பத்தினிக்குக் கல்லெடுப்பித்ததும்.


இங்ஙனம் வஞ்சிமாநகரிற் பறையறையப்பட்ட பின்னர், சேரன்-செங்குட்டுவன் அன்று மாலையில், ஆசான் பெருங்கணி அமைச்சர்களும் தானைத்தலைவருந் தன்னை வாழ்த்தி நிற்கச் சிங்காதனத்தே வீற்றிருந்து தன் சேனாதிபதிகளை நோக்கி அடியில் வருமாறு கூறுவானாயினான் :–“ஆரியமன்னர் பலரும் தம் நாட்டில் நிகழ்ந்த சுயம்வரமொன்றன் பொருட்டுக் குழுமியிருந்த பெருங்கூட்டத்தே - ‘தென்றமிழ்நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து - மின்றவழு மிமய


  1. ‘எதிரேற்றுக் காணீராயின், கடலுட்புக்கும் மலையினேறியும் வாழுமின் என்பார், இரண்டு வார்த்தையுங் கேட்டு வாழுமின் - என்றார்’ என்பது அரும்பதவுரை
  2. தோட்டுணை - மனைவியர்.
  3. ‘திருமேனியாகிய சேனாமுகம் ; சேனாமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், திருமேனி என்றார்’ என்பது அரும்பதவுரை.