பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சேரன்-செங்குட்டுவன்

டைந்த துயரங்களை ஆங்குள்ள பெரியோர்கட்கு உரைக்கலாயினேன் . அவ்வாறுரைத்த செய்தி சிறிது சிறிதாக ஊரெங்கும்பரவி முடிவில் கோவலன் தந்தை மாசாத்துவானுக்கும் எட்ட, அவ்வணிகர்தலைவன், தன்மைந்தனுக்கும் மருகிக்கும் பாண்டியனுக்கும் நேர்ந்த கொடுந்துன்பங்களைச் சகியாதவனாய், இல்லறத்தை வெறுத்துத் தான்படைத்த பெரும்பொருளனைத்தையும் உத்தமதானங்களிற் செலவு செய்துவிட்டுப், பௌத்தசங்கத்தார் இருக்கையாகிய இந்திரவிகாரத்தைச் சார்ந்து, அங்கே தவஞ்செய்துகொண்டிருந்த முனிவர் நூற்றுவரைச் சரணமடைந்து துறவியாயினன். அம் மாசாத்துவான் மனைவியாகிய கோவலன்தாயோ, தன் செல்வப்புதல்வனுக்கு நேர்ந்த விபத்தைப் பொறாதவளாய் அளவிறந்த துயரால் நொந்து உயிர்விட்டனள். இனிக் கண்ணகியின் தாதையான மாநாய்கன் தவமுனிவராகிய ஆசீவகரையடைந்து தன் பொருள்களாற் புண்ணியதானங்களைப் புரிந்து துறவு பூண்டனன். அவன் மனைவியாகிய கண்ணகியின் தாய் சில நாள்களுள்ளே உயிர் நீத்தனள். இச்செய்தியெல்லாங்கேட்ட கோவலன் கணிகையாகிய மாதவி பெரிதுந் துக்கித்து, துன்பம் விளைவிக்கும் பரத்தையர்கோலத்திலே தன்மகள் மணிமேகலையைப் புகவிடாதபடி தன் தாயான சித்திராபதிக்குக் கூறி விட்டு, மாலையுடன் தன் கூந்தலையுங்களைந்து பிக்ஷணியாகிப் பௌத்த விகாரமடைந்து தருமோபதேசம் பெற்றனள். இங்ஙனமாக, யான் மதுரையிலிருந்து கொணர்ந்த கொடுஞ்செய்திகேட்டு இறந்தவர் சிலரும் உண்மையால் அப்பாவவிமோசனத்தின் பொருட்டுக் கங்கையாடவெண்ணி இங்குவரலாயினேன் ; இதுவே என் வருகைக்குக் காரணம் ; வேந்தே! நீ