பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

77


மகளிரது இன்பக்கடலிலாடித், தங்குலைந்த கோலத்தைக் கண்ணாடியாற்றிருத்திக்கொண்டு யாழ்தழுவிக் குறிஞ்சிப்பண்ணை இனிது பாடிய அந்நங்கையரால் கா ன வி ரு ந் து செய்யப் பெற்றனர்.

இங்ஙனம், அவ்வழகிய மாலைக்காலமானது வீரர்க்கெல்லாம் இன்பவிருந்தயர்வித்துப் பின், சேரன்-செங்குட்டுவன் குடிகளது குறைதீர வெளிப்போதருங் காலத்து விளங்கும் அவனது திருமுகம் போல, உலகந்தொழும்படி தோன்றிய பூர்ணசந்திரனை அவ் வஞ்சிமூதூர்க்குக் காட்டித் தான் நீங்கியது. அப்போது மைந்தரும் மகளிருந் தன்னாணைப்படியே நடக்குமாறு ஐங்கணைக்கிழவனான மன்மதன் அரசுவீற்றிருந்த நிலாமுற்றங்களும், பூம்பள்ளிகளும், நடனசாலைகளும், மலர்ப்பந்தர்களும், மஞ்சங்களும், விதானமமைந்த வேதிகைகளும் அத்தண்கதிரால் விளக்கமுறுவனவாயின. கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு இடைநின்று விளங்கும் மேருப்போல, அவ் வஞ்சிமாநகரின் நடுவுநின்றோங்கும் பொன்மயமான அரண்மனையிலுள்ள நிலாமுற்றமாகிய மணியரங்கில் அப்பூர்ணசந்திரனது காட்சியைக் காணவேண்டி, மகளிர் தம் வளைக் கைகளில் விளக்குகளை ஏந்திப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஒருபுடை "வாவும், மத்தளம் வீணைகளுடன் பண்கனிந்த பாடலிசைகள் ஒருசார் பரவவும், கூனருங் குறளரும் கஸ்தூரி வெண்கலவைச் சாந்தங்களை ஏந்தினவராய் ஒருபுடை செல்லவும்," பெண்கோலம் பூண்ட பேடியர் வண்ணஞ்சுண்ணம் மாலையிவற்றைத் தாங்கிவரவும், பூவும் நறும்புகைகளும் வாசனைப்பண்டங்களும் பரவவும், கண்ணாடி தூமடி அணிகலன்களைக் கொண்டு சேடியர் சூழவும், இவ்வாறாக எழுந்தருளிய