பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 175



குட்ட நாட்டிற்குக் கிழக்கில் நிற்கும் மலைகளில் பேரி யாற்றங்கரையில் நேரிமலை நிற்கிறது. அந்த மலையடிப் பகுதியில் சேரமன்னர் போதந்து வேனிற் காலத்தில் தங்கி மலைவளம் கண்டு இன்புறுவது வழக்கம். இப்போது அங்குள்ள நேரியமங்கலம் என்னும் மூதூரே பண்டு சேரமன்னர் வந்து தங்கிய இடமாகலாம் என அறிஞர் கருதுகின்றனர்; கற்குகைகளும் பாழ்பட்ட பழங்கட்டிடங்கள் சிலவும் அவ்விடத்தில் இருந்து பழம்பெருமையைப் புலப்படுத்தி நிற்கின்றன. வேந்தர்கள் அங்கு வந்து தங்கும் போது பாணரும் கூத்தருமாகிய இரவலர் பலரும் வேந்தன் திருமுன் போந்து, பாட்டும் கூத்தும் நல்கி இன்புறுத்துவர். நார்முடிச் சேரல், தன் மனைவியும் அரசியற் சுற்றமும் உடன்வர, நேரிமலைக்குப் போந்து தங்கினான். அக் காலையில் காப்பியாற்றுக் காப்பியனாரும் வந்திருந்தார். வேந்தன் இன்பமாக இருக்கும் செவ்வி நோக்கி இனியதொரு பாட்டைப் பாடினார். விறலி யொருத்தியை நார்முடிச் சேரல்பால் ஆற்றுப்படுக்கும் குறிப்பில் அப் பாட்டு இருந்தது. அதன்கண், சேரமான் நன்னனொடு பொருந்தற்குச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று குறிக்கப்படுகிறது. போர் முரசு படையணி யானை மீதிருந்து இமய, மறவர் முன்னணியில் நிற்க, தூசிப் படையானது சென்று கரந்தை வயலில் தங்கிற்று. பகைப்புலத்துத் தலைவர்கள், சேரமானுடைய மறவர் சுற்றத்தாருடன் தங்கிக் கண்டு அஞ்சி, அங்கே இருந்த நாட்டு மக்களைக் கைவிட்டு விட்டு ஓடிவிட்டனர். காவல் மறவர் பணிந்து நின்று,