பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 சேர மன்னர் வரலாறு



இன்பத்தையே நாடுவது செங்குட்டுவனது சிறந்த பண்பாகும். மேலும், தனக்கு ஒரு குறையுண்டாயின், அது குறித்துப் பிறரை அடைந்து இரந்து நிற்கும் சிறுமை செங்குட்டுவன்பால் கனவினும், செங்குட்டுவன், உலகியல் பொருளின்பங்களில் மிகக்குறைந்த பற்றும், தன் புகழ் நிலைபெறச் செய்வதில் ஊற்றமும் ஊக்கமும் உடையன் எனச் சாலும்.

குடவர் கோமான் என்ற இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆட்சிசெய்த காலத்தில், சோழவேந்தர் நட்புப் பெற்று அவருள் சிறந்தோன் ஒருவனுடைய மகளான மணக்கிள்ளி யென்பவளை மணந்து கொண்டான். அவளுக்குப் பிறந்த செங்குட்டுவன், இளமையில் சோழநாட்டு வேந்தன் மனையில் இருந்து சோழர்களின் குணஞ் செயல்களையும் நாட்டின் நலங்களையும் அறிந்திருந்தான். செங்குட்டுவன் குட் நாட்டில் அரசு புரந்து வருகையில், ஒருகால், சோழருட் சிலர் தம்முள் ஒருவனான கிள்ளியென்பான்[1] அரசு கட்டிலேறுவது பற்றிப் பகை கொண்டு ஒருவரோ டொருவர் பூசலிட்டனர். அதனால் நாட்டின் நலம் குறைந்தது. அந் நாளில் பாண்டி வேந்தர் அவர்களை அடக்கி நன்னிலைக்கண் நிறுத்தும் அத்துணை வலியின்றியிருந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மோகூரில் இருந்த குறுநிலத்தலைவர்களே மேம் பட்டிருந்தனர். ஆயினும் அவர்கள் நடுநிலை பிறழ்ந்தொழுகினர். இதனால் சோழநாட்டுச் சான்றோர்


  1. இவனைக் கரிகாலனெனக் கருதுவோரும் உண்டு. அகம். 125.10