பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 சேர மன்னர் வரலாறு


குடக்கோ: (முறுவலித்து) வறுமையுற்றபோது நும் மனைவியும் நும்மை வேண்டாள்; ஆகவே, நீர் இப்போது போவதால் பயன் என்னை?

பெருங்குன்: வேந்தே, என் மனையுறையும் காதலி வறுமைத்துயர் வாட்டும் போதும் தன் கடமை தவறாள். இதுகாறும் அவள் இறந்திருக்க வேண்டும்.

குடக்கோ: அப்படியாயின், வருந்த வேண்டாவே.

பெருங்: இறவாமல் இருந்தால்?

குடக்கோ: (நகைத்து) இருந்தால், இதுவரை இருந்ததுபோல் இருக்கத்தானே போகிறாள்!

பெருங்: இறவாதிருப்பாளாயின், என்னை நினையாதிராள்; நினைக்கும் போதெல்லாம் “கூற்றமோ அறமில்லாதது; இழைத்த நாள் நோக்கி உயிர்களைக் கவர்வது அதற்கு அறம்; அந்த அறத்தைக் கைவிட்டு என் கணவன் உயிரை யுண்டதோ, என்னவோ? அவர் இன்னும் வந்திலரே!” என்று நினைத்து வருந்துவாள். அவளது இடுக்களைத் தீர்த்தற்காகவேனும் யான் போதல் வேண்டும்.

குடக்கோ: அப்படியாயின், நீவிர் போய் வரலாம்.

பெருங்: (திகைப்பும் சினமும் கொண்டு) வேந்தே , நின்தானை சென்று பகைவர் அரணை முற்றிய போது, அரண் காக்கும் பகைவர் செயலற்றுப் போவர், அவ்வாறே யான் யெலற்றுச் செல்கின்றேன். நினது தானைபோல என்னை வறுமைத் துயர் முற்றிக்