பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288 சேர மன்னர் வரலாறு



அடியில் விச்சியூர் என்று ஓர் ஊர் இருப்பதும், விச்சி நாட்டதெனப் பரணர் கூறும் குறும்பூர்[1]” அப் பகுதியில் இருப்பதும் இம் முடிவு வற்புறுத்துகின்றன.

விச்சியும் வேந்தரும் தோற்று வீழ்ந்த காலத்தில் பொற்கலன்கள் பல சேரமானுக்குக் கிடைத்தன. அவற்றை அவன் சிறு சிறு கட்டிகளாக உருக்கித் தானை மறவர்க்கும் பரணர் முதலிய பரிசிலர்க்கும் இரவ லர்க்கும் வழங்கினான். கொல்லிமலையில் உள்ள இருள்வாசிப் பூவையும் பசும்பிடியை (மனோரஞ்சி தத்தையும் தன் மனைவி விரும்பிச் சூடிக் கொள்ளக் கண்டு இன்புற்றான்.[2]

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை தன் நகர்க்கு வந்ததும் பெரியதொரு வெற்றி விழாச் செய்தான். அக்காலை, குறுநிலத் தலைவரும் வேந்தரும் செல்வரும் வந்திருந்தனர். பாணர், விறலியர், பொருநர், கூத்தர் முதலிய பரிசிலர் பலரும் வந்து வேந்தனை மகிழ்வித்துப் பரிசில் பெற்றனர். பெருங்குன்றூர் கிழார், “இரும்பொறையைக் கண்டு, கடம்பு முதல் தடித்த நெடுஞ்சேரலாதன், அயிரை பரவிய பல்யானைச் செல்கெழுகுட்டுவன், நன்னனை வென்ற நார்முடிச் சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், கொங்கு புறம் பெற்ற செல்வக் கடுங்கோ வாழியாதன், கழுவுளை வென்ற பெருஞ்சேரல்


  1. குறுந், 828, விச்சியூர், பின்பசிறுவிச்சியூர் ருெவிச்சியூர் என இரண்டாயிற்று; அவற்றுள் பெருவிச்சியூர் மறைந்துபோகச் சிறுவிச்சியூர் இப்போது சிராப்பள்ளி சென்னைப் பெருவழியில் சிறுவாச்சூர் என நிலவுகிறது.
  2. பதிற் 81.