பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318 சேர மன்னர் வரலாறு



“பரல் முரம்பாகிய பயமில் கானம்
இறப்ப எண்ணுதிராயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினன் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே[1]

என்று வருவது அப் பாட்டு.

அவருடைய பாட்டுகளில் முன்னர்க் காட்டிய அறங்களே யன்றி, மூவெயில் முருக்கிய முக்கட் செல்வனும், அரக்கு மனையில் அகப்பட்டு வருந்தும் பாண்டவரும், அவரை விரகிற் கொண்டேகும் வீமனும், மீனக் கொடியுடைய காமனும் பிறரும் காட்சி தருகின்றனர். கான மரங்கள் ஞானம் நல்குகின்றன. கான்யாற்றின் கரை மரங்கள் தீதிலான் செல்வத்தைச் சிறப்பிக்கின்றன. இளவேனிலில் மரங்களும் கொம்பும் கிளையும் கொடியும் புதலும், உணர்ந்தோர் ஈகை, நல்லவர் நுடக்கம், ஆன்றவர் அடக்கம் முதலிய நற் காட்சிகளை[2] மனக் கண்ணிற் காட்டுகின்றன. இயற்கைக் கவிஞர் என ஏனை. நாட்டுப் புலவர்களை


  1. அகம். 5.
  2. கலி. 32.